20 மே, 2010

யாழ். குடா நாட்டில் 'லைலா' தாக்கத்தால் பலத்த சேதம்

வங்கக் கடலில் உருவான தாழமுக்கம் காரணமாக ஏற்பட்ட 'லைலா' புயலின் தாக்கம் இன்று வியாழக்கிழமை அதிகாலை வரை நீடிக்குமென யாழ்ப்பாணம் திருநெல்வேலி வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் நேற்று முன்தினம் இரவு சுமார் 10மணியளவில் கடும் காற்றும் இடிமின்னலுடனும் கூடிய மழை யாழ். குடாநாடு முழுவதும் பெய்தது. இதனால் யாழ்.குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் 44.1 மி.மீ . மழை பதிவாகியுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் நேரடியான தாக்கம் இல்லாவிடினும் அதனுடைய தாக்கம் ஓரளவு ஏற்படுவதற்கு இன்று அதிகாலை 5.30 மணிவரை வாய்ப்பு இருக்கலாமெனவும் அவ்வப்போது வேகமான காற்றுடன் மழை பெய்யலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டின் கடலை அண்டிய பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சேத விபரங்களை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் சேகரித்து வருவதாகவும் மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக