20 மே, 2010

வெள்ளப்பெருக்கு : 18பேர் மரணம்; சுமார் 4 லட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் பரவலாகப் பெய்துவரும் இடிமின்னலுடன் கூடிய கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 213 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 58 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 18 பேர் மரண மடைந்துள்ளனர் என இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள். இவர்களுக்கான நிவாரண பணிகளை அமைச்சின் ஆலோசனையுடன் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கென முகாம்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மக்களுக்கு உதவி வழங்க ஐக்கிய நாடுகளின் உணவுத்திட்டத்தின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக