விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை தருவதற்கு பெரிய நிபந்தனைகள் ஏதும் விதிக்குமாறு தமிழகம் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தில்லியில் திங்கள்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பார்வதி அம்மாளின் பாதுகாப்பு கருதி - அரசின் மேற்பார்வையில் அவர் சிகிச்சை பெற வேண்டும் என்றும், சிகிச்சைக்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்றும் மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதைத்தான் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடுத்து, அரசு சார்பில் அதற்கு பதில் அளிக்கப்பட்டு, தீர்ப்பு வந்ததின் தொடர்ச்சியாக பார்வதி அம்மாளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.
அவருடைய பாதுகாப்பு கருதி, அரசின் அரவணைப்பில் நாங்கள் குறிப்பிடும் மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அரசு செலவில் சிகிச்சை பெற வேண்டும் என்பதுதான் நாங்கள் கூறியுள்ள நிபந்தனைகள்.
இது ஒன்றும் கடுமையானது அல்ல என்று முதல்வர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக