புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான அதீத முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்தால் நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தடுத்து நிறுத்துவதே இன்றுள்ள பிரதான சவாலாகும். இதற்கு அவசரகால சட்ட நீடிப்பு அவசியமாகும். அவசரகால சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அச்சட்டம் நீக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, 17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென்றும், அரசசேவைகள் ஆணைக்குழுவை நியமிப்பதன்மூலம் பாரபட்சமற்ற அரசசேவைகளை உருவாக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவசரகாலச் சட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கு வேறு பெயரை சூட்ட வேண்டுமெனவும், அவசரகாலச் சட்டம் என்பது அவசர நேரத்தில் அமுல்படுத்த வேண்டியதெனவும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தான் ஒரு அரசியல் கைதியென்று தெரிவித்த அவர், நாட்டில் அமுலிலிருக்கும் சாதாரண சட்டத்தின்கீழ் பொதுமக்களை நடமாடுவதற்கு இடமளிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
4 மே, 2010
புலிகளின் சர்வதேச வலையமைப்பை தடுத்து நிறுத்துவதே இன்றைய சவால் என பிரதமர் தெரிவிப்பு

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக