4 மே, 2010

சீன தூதரக அதிகாரிக்கு அடி-உதை






அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தில் துணைத்தூதரக அதிகாரியாக இருப்பவர் ï போரன். இவர் காரில் அலுவலகத்துக்கு வந்தார். காரில் நம்பர் பிளேட் இல்லாததால், போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் தூதரகத்துக்குள் நுழைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து தூதரகத்துக்குள் நுழைந்தனர். தூதரக அதிகாரி காரை விட்டு இறங்கியதும் அவரை அடித்து உதைத்தனர். அவரை கைது செய்தனர்.

தூதரகத்துக்குள் போலீசார் நுழைந்து நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அதோடு தூதரக அதிகாரிகளுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி இருந்தும் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது. அதோடு இந்த சம்பவம் பற்றி விசாரித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது.

நகர மேயர் அன்னீஸ் பார்க்கர் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். அதோடு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் 3 பேருக்கும் கட்டுப்பாடுகள் விதித்தார். அவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறக்கூடாது என்றும் எழுத்து வேலைகளை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்றும், உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக