4 மே, 2010

இன்ஜினில் எரிபொருள் கசிவு் இலங்கை விமானம் தப்பியது






திருச்சி்பறக்கத் தொடங்குவதற்கு முன்பு இன்ஜினில் எரிபொருள் கசிவு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்ததால் இலங்கை விமானம் விபத்தில் இருந்து தப்பியது. இலங்கை திருச்சி இடையே மிகின் லங்கா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் தினமும் மதியம் 1 மணிக்கு திருச்சி வந்துஇ 2 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட்டுச் செல்லும். நேற்று 15 நிமிடம் தாமதமாக 1.15 மணிக்கு திருச்சி வந்தது. இலங்கை செல்லும் பயணிகள் 132 பேர் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். 2.25 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. இன்ஜினை இயக்கிவிட்டுஇ புறப்பட தயாராக இருந்த நேரத்தில் எரிபொருள் வாடை வருவதை விமானி உணர்ந்தார். உடனே இன்ஜின் இயக்கத்தை நிறுத்திவிட்டு சோதனை செய்தார். ஒரு இன்ஜினில் எரிபொருள் கசிந்துகொண்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாததால் பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். உடனடியாக சரிசெய்ய முடியாத பழுது என்பதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் புறப்படும் முன்பு எரிபொருள் கசிவதை விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக