4 மே, 2010

நாடு கடந்த அரசமைக்கும் புலிகளின் முயற்சி முறியடிக்கப்படும்


நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இத்தகைய அரசொன்றை அமைப்பதற்கான தேர்தலொன்றை நடத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாம் ஒரு தேர்தலாக ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சு சர்வதேச ரீதியிலுள்ள தூதரகங்களுக்குத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்கவும் தேவைப்பட்டால் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அங்கு அனுப்பவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றபின் நடாத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் மற்றும் முக் கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-

யுத்த காலங்களின்போது வெளிவிவகார அமைச்சு வழங்கிய பங்களிப்பைப் போன்றே புலிகளுக் கெதிரான சர்வதேச சவால்களை முறியடிக் கும் நடவடிக்கையிலும் வெளிவிவகார அமைச்சுக்குப் பெரும் பங்குண்டு என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். இந்த வகை யில் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவேயுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் சம்பந்தமாகக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சி அரசாங்கத்தை அசெளகரியத் திற்குள்ளாக்கவே முயற்சிக்கிறது. இத்தகைய தருணத்தில் கட்சி அரசியலுக்கப்பால் நாட்டின் நலன் தொடர்பான முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்க்கட்சி முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக