28 மார்ச், 2010

ஐ.தே.க.ஆதரவாளர்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓரம் கடும் முயற்சியில்



தேசாபிமானம் என்ற பதத்தை பயன்படுத்தி அதற்கு தவறான விளக்கத்தைக் கொடுத்து ஐ.தே.க.ஆதரிப்பவர்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஓரம் கட்டும் ஒரு கைங்கரியத்தை அரசு மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டி ஜானகி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஜாதிக சேவக சங்கத்தின் (தேசிய சேவைகள் சங்கம்) மற்றும் கண்டி மாவட்ட அமைப்புக்களின் தொழிற் சங்கத் தலைவர்களுடனான கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் சார்பில் நான்கு பிரமுகர்கள் பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டனர்.இது நாடறிந்த உண்மை.இதில் அமைச்சர் மிலிந்த மொரகொட, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் இடம்பெற்றனர்.

இன்று அவர்களில் நான் மட்டும் எதிரணியில் இருகிறேன். அதில் என்னை மட்டும் தேசத்துரோகி என அரச ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன.

ஒரே பேச்சு வார்த்தைக்குச் சென்ற நால்வரில் மூவர் அரசுடன் இருப்பதனால் அவர்கள் தேசாபிமானிகள் எனப் போற்றும் அதேநேரம் எதிரணியில் இருப்பதன் காரணமாக என்னை தேசத்துரோகி என்கின்றனர்.

இதுதான் அரசு இன்று கையாளும் தேசாபிமான சித்தாந்தம். ஆனால் இது சிறுபான்மை மக்களிடத்தில் எடுபடுவதில்லை."எனத்தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக