28 மார்ச், 2010

கிறிஸ்துமஸ் தீவில் இருந்த 90பேர் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்குள் அனுமதி


அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 90 சட்டவிரோத குடியேறிகள் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்படவிருந்த இவர்களுக்கு தொடர்ந்து அகதி அந்தஸ்து கோரும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிறிஸ்துமஸ் தீவில் நிலவுகின்ற இடநெருக்கடி காரணமாகவே இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிகள் இந்நடவடிக்கைக்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கம் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக