28 மார்ச், 2010

தமிழர் புனர்வாழ்வு கழக தலைவரை கைதுசெய்ய பிடியாணைஇ கிழக்கில் மூன்று வானொலிகள்மீது முறைப்பாடு





தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிசாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் புலிகளுக்கு நிதியுதவி அளித்ததாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கொழும்பில் இயங்கியபோது வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு நிதியுதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப்பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்களின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை கிழக்கில் தேர்தல் பிரச்சாரத்துக்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள மூன்று வானொலி சேவைகள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் கண்காணிப்புக் குழுக்கள் முறையிட்டுள்ளன. காத்தான்குடி வானொலிச் சேவை மற்றும் ஹிஸ்புல்லா வனொலிச்சேவை ஆகியன 24 மணித்தியாலமும் சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக