19 மார்ச், 2010

புதிய பாதை புதிய சிந்தனை


நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங் களில் வாழும் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டிய வர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், கட்சியின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் பார்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் ஒப்புவிக்கும் பழைய பல்லவியினால் வழிநடத்தப்படுவதா அல்லது புதிய சிந்தனைக்கு இடமளிப்பதா என்பதையிட்டு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களைத் தொடர்ச்சியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைமையின் வழிவந்த வர்களே இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். முதலாவது பாராளுமன்ற காலத்திலேயே பேசுபொருளாக இருந்த இனப் பிரச்சினை இதுவரை தீர்க்கப்படாதிருப்ப தற்கான பொறுப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் சார்பிலும் முன்னைய தலைவர்களின் சார்பிலும் ஏற்றாக வேண்டும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி சமஷ்டிக் கோரிக்கை யுடன் ஆரம்பமாகியது. சமஷ்டிக் கோரிக்கையை வென் றெடுப்பது சாத்தியமில்லை என்ற நிலை இப்போது உரு வாகியிருக்கின்றது. அது மாத்திரமன்றி, இனத்துவ மற்றும் அடிப்படை உரிமைகளைப் பொறுத்த வரையில் பல பின் னடைவுகளைத் தமிழ் மக்கள் இப்போது சந்தித்திருக்கின் றார்கள். இம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர் கள் காலத்துக்குக் காலம் விட்ட தவறுகளே இந்த நிலை மைக்குக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இட மில்லை. முழுமையான அரசியல் தீர்வுக்காக, கிடைத்த தீர்வுகள் எல்லாவற்றையும் இவர்கள் நிராகரித்ததன் துர்ப் பலனையே தமிழ் மக்கள் இன்று அனுபவிக்கின்றார்கள். இவர்களின் இராஜதந்திரமற்ற அணுகுமுறை கையில் கிடைத்த தோண்டியைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு டைத்தவனின் கதை போல் ஆகிவிட்டது. இத்தலைவர்கள் இதுவரை பின்பற்றிய அரசியல் பாதை தோற்றுவிட்டதைக் கண்கூடாகக் காண்கிறோம். இப்போது தேவையானது புதிய பாதை. புதிய சிந்தனை.

இன்றைய நிலையில் முழுமையான அரசியல் தீர்வை உடனடி யாக அடைவது எவ்விதத்திலும் சாத்தியமில்லை. படிப்படி யாகத் தீர்வை அணுகிச் செல்லும் நடைமுறையே இப் போது பலனளிக்கக் கூடியது. இந்த நடைமுறையைப் பின் பற்றுவதன் மூலம் தமிழ் மக்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் பல துன்பங்களுக்குத் தீர்வு கிடைப்பதோடு காலப்போக்கில் முழுமையான அரசியல் தீர்வை அடையக் கூடியதாகவுள்ள அதே வேளை இறுதித் தீர்வுக்குத் தடை யாகவுள்ள பேரினவாத சக்திகளை பலவீனப்படுத்தவும் முடியும். இதுவே நடைமுறைச் சாத்தியமான தீர்வுமார்க்கம்.

சமகால யதார்த்தத்துக்கு ஒவ்வாத கோரிக்கைகளை மாத்திரம் வலியுறுத்திக் கொண்டிருப்பது விமோசனத்தைப் பெற்றுத் தராதது மாத்திரமன்றி, மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் தொடர்வதற்கும் வழிவகுக்கும். எனவே நடை முறைச் சாத்தியமான வழியில் தீர்வை அணுகிச் செல்வதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ள தலை மையே தமிழ் மக்களின் இன்றைய நிலையில் அவசிய மானது.

பிரச்சினையின் தீர்வுக்குப் பொருத்தமானதும் சாத்தியமானது மான கொள்கையைக் கொண்டிருப்பது மாத்திரம் போதாது. அக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவரக் கூடிய செயல்பாடும் தேவை. பதவியிலுள்ள அரசாங்கத்துடனான இணக்க அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலமே தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுக்க முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே மீண்டும் ஆட்சி அமைக் கும் என்பது கள நிலைமைகளிலிருந்து தெரிகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய முடிவுக்கு வருவதற்கு முன் மேலே குறிப்பிட்ட விடயங்களைக் கவனத்தில் எடுத்து நிதானமாகச் சிந்திக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக