19 மார்ச், 2010

நாட்டில் 38 ஆயிரம் கிராமங்களில் முழுமையான அபிவிருத்திப் பணிகள் வறுமை நிலை 24 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைப்பு


50 ஆயிரம் கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்பு
திரியபியச வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 14,000 வீடுகள்நாடு முழுவதிலுமுள்ள பதினான்காயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளும் 38 ஆயிரம் கிராமங்களும் உள்ளடங்கும் வகையில் முழுமையான பாரிய அபிவிருத்திப் பபணிகள் முன்னெடுக்கப்பட் டுள்ளதாக தேச நிர்மாண மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கே.கே. குமாரசிறி தெரிவித்தார்.

மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தி சமூக, பொருளாதார, கலை, கலாசாரத் துறைகள் என அனைத்துக் கட்டமைப்பு களையும் துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குமாரசிறி தெரிவித்தார்.

இதன் மூலம் 2004ம் ஆண்டு 23.4% ஆகக் காணப்பட்ட வறுமை நிலை தற்போது 15.2% ஆகக் குறைந்துள்ளதாக தேச நிர்மாண அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்ட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் குமாரசிறி, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆரிய ரூபசிங்க மற்றும் நாட்டின் ஏழு அபிவிருத்தி வலயங்களினதும் மேலதிகச் செயலாளர்கள், சமுர்த்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கடந்த நான்காண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விளக்கமளி த்தனர்.

அந்த வகையில் 2006ம் ஆண்டு 119 கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்ட கமநெகும திட்டம் 2007ல் 14 ஆயிரம் கிராம சேவையாளர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு கொழும்பில் வைத்துத் தீர்மானிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது மாவட்டங்களில், கிராமங்களிலிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு திட்டம் வகுத்துச் செயற்படுத்தப்படுகிறது.

பிகமநெகுமபீ திட்டத்தின் கீழ் ஒன்பதாயிரம் கிலோ மீற்றர் பாதைகள் செப்பனிடப்பட்டுள்ளன. 43 ஆயிரம் கிலோ மீற்றர் பாதைகள் கொங்கிஹட் போடப்பட்டுள்ளன. அதேபோன்று வடக்கின் வசந்தம், கிழக்கில் உதயம் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப் படுகின்றன. கிழக்கு மக்களின் பொருளாதார நிலை மேம்பட்டுள்ளது. கிழக்குக்குச் செல்லும் சகல பாதைகளும் பிகாபட்பீ போட்டு செப்பனிடப்பட்டுள்ளன. சகல படகுப் பாதைகளுக்குப் பதிலாக பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. பயிர்ச் செய்கை பண்ணப்படாமல் இருந்த 150,000 ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படுகின்றது.

மீள் குடியேற்றம்

இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மார்ச் மாத இறுதிக்குள் மீளக்குடியமர எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் காரணமாக சிலவேளை தாமதமாகலாம். எவ்வாறெனினும் மே மாதமளவில் நிறைவு செய்துவிட முடியும். கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு 1800 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. 29 இயந்திரங்கள் அவசரமாக விமானத்தில் தருவிக்கப்பட்டன. கண்ணி வெடிகளை அகற்றுவதில் குடியிருப்புப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அடுத்ததாக விவசாய நிலங்கள் எனத் துரிதமாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீடமைப்புத் திட்டம்

பிதிரிய பியசபீ வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட் டுள்ளன. படைவீரர்களின் குடும்பங்களுக்கென கடந்த ஆண்டில் 1040 வீடுகள் அமைக் கப்பட்டுள்ளன. விவசாயப் பிரதேசங்களைத் துரிதமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களைப் படிப்படியாக இணையத்தளத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மலையக அபிவிருத்தி

பெருந்தோட்ட அபிவிருத்தி வலயத்தில் 14 மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களின் பிலயத்துபீ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தேசிய அபிவிருத்தியில் மலையகத்தை உள்வாங்குவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 12,231 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக