7 டிசம்பர், 2010

ஜனாதிபதியை கெளரவித்து கூடுதலானோருக்கு ஹஜ் வாய்ப்பு அலவி மெளலானா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு தசாப்தங்களுக்கு கூடுதலாக பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு தன்னிகரற்ற தேசத் தலைவராக இருப்பதனால் அவர் மீது அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் பெரு மதிப்பை வைத்திருக் கின்றன. அதனால் தான் இந்தத் தடைவை புனித ஹஜ் கடமைகளில் ஈடுபடச் செல்வதற்கு கூடுதலான அளவு சுமார் 5800 இலங்கையர் செல்வதற்கு சவூதி அரசாங்கம் அனுமதி அளித்தது என்று மேல் மாகாண ஆளுநரும், ஹஜ் குழு தலைவருமான அலவி மெளலானா தெரிவித்தார்.

எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரிட்டிஷ் அரசாங்கம் உரிய முறையில் கெளரவிக்க தயங்கினாலும் அவருக்கு இஸ்லாமிய உலகில் பெருமதிப்பும், ஆதரவும் இருக்கிறது. ஜனாதிபதி அவர்கள் பிரயாண முகவர்களுக்கு சலுகைகளுக்கு பதில் புனித ஹஜ் பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கு சகல வசதிகளையும் பெற்றுக்கொடுத்து குறைந்த செலவில் மக்காவுக்கு சென்று திரும்புவதற்கு உறுதுணை புரியுமாறு ஹஜ் கமிட்டி அங்கத்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததாக மேல் மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார். ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மக்காவுக்கு ஹஜ்ஜா ஜிகளை அனுப்பி வைக்கும், நடைமுறையில் மோசடிகள் செய்வதற்கு எவ்வித இடமும் இல்லை. இந்த விடயத்தில் மோசடிகள் இடம்பெற்றதாக அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு நிச்சயம் எல்லாம் வல்ல இறைவனின் தண்டனை அடுத்தாண்டு புனித ஹஜ் யாத்திரை காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் கிடைக்குமென்று அலவி மெளலானா கூறினார்.

முஸம்மில் போன்ற சில எதிர்க் கட்சி யினர் ஹஜ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கமிஷன் அடித்துக் கொள்ளை இலாபம் திரட்டுகிறார்கள் என்றும் எங்கள் மீது போலியான அபாண்ட குற்றச்சாட்டுக்களை அரசியல் இலாபம் தேடும் எண்ணத்துடன் சுமத்துகிறார்கள். இந்த போலி கற்றச் சாட்டுக்களை கேட்கும் போது எங்களுக்கு உண்மையிலேயே மன வேதனை ஏற்படு கின்றதென்று மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலான; தான் 55 ஆண்டுகாலம் அரசியலில் இருந்து வருகிறேன். அரசியல காரணங்களுக்காக நான் எதிர்க் கட்சியினரால் அடித்துக் துன்புறுத்தப்பட்டு காயப்பட்டும் இருக்கிறேன். ஆனால் இன்று என் மீதும் எனது ஹஜ் கமிட்டி அங்கத்தவர்கள் மீதும் அரசியல் காரணங்களுக்காக சுமத்தப்பட்டி ருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்மை யிலேயே எனக்கு மன வேதனை அளிக் கிறது என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர்களான பதியுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ். ஹமீத், எம்.எச். எம். அஷ்ரப், தற்போதைய சிரேஷ்ட அமைச்சர ஏ.எச்.எம். பெளசி, ஐ.ஏ. காதர் போன்ற தலைவர்களின் பாதையில் இன்று நாம் ஹஜ் கடமையின் ஊடாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்து வருகிறேன். இதைப் பார்த்து பொறாமைக்காரர்கள் இத்தகைய போலிக் குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத் தினாலும் மக்கள் இந்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக