7 டிசம்பர், 2010

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஐ.தே.கவுக்கு எதிராக மக்கள் சகலரும் கிளர்ந்தெழ வேண்டும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் அறைகூவல்

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இலங்கையை யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என ஐ. தே. க. தெரிவித்துள்ளதாக அரசாங்கம் கூறியது. வெளிநாடுகளில் இயங்கும் புலி ஆதரவாளர்களுடன் இணைந்து நாட்டை அவமானப்படுத்தும் இந்த பாரிய காட்டிக்கொடுப்புக்கு எதிராக முழு நாட்டு மக்களும் கிளர்ந்தெழ வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ. ம. சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த்; இலங்கையை யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இதன் மூலம் அவரினதும் ஐ.தே.க. வினதும் உண்மையான சுயரூபம் அம்பலமாகி யுள்ளது. திட்டமிட்டு தேவையான காலகட்டத்திலே கரு ஜயசூரிய இந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற புலி ஆதரவாளர்கள் தடையாக இருந்தனர். இதற்கு ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர் தனவும் ஒத்துழைத்தார். மேற்படி சம்பவம் நடைபெற்று ஓரிரு நாட்களிலே கரு ஜயசூரிய இந்த யுத்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்வதற்கு ஐ.தே. க. தேவையான பின்னணியை ஏற்படுத்த முயல்கிறது. கரு ஜயசூரியவின் கருத்து மிகவும் பாரதூரமானது. ஐ.தே.க. வின் நிலைப்பாட்டையே அவர் கூறியுள்ளார். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக கூறப் பட்ட இந்த கருத்தை நாம் வன்மை யாக கண்டிக்கிறோம். யுத்தகால சம்பவங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டை அவமதிக்காது அங்கு சென்று சாட்சியமளிக்குமாறு கரு ஜயசூரியவை கோருகிறோம் என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,

ஐ.தே.க. வுக்கும் புலி ஆதரவாளர் களுக்கு மிடையில் கூட்டு செயற்பாடுகள் இடம் பெறுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட் டுள்ளது. சர்வதேச மட்டத்தில் நாட்டை அவமதிக்க ஐ.தே.க. முயல்கிறது. தேசப் பற்றுள்ளவர்கள் யார், தேசத் துரோகிகள் யார் என இனங்கண்டு செயற்பட வேண்டிய காலம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. கரு ஜயசூரியவின் கூற்றை நாம் வன்மை யாகக் கண்டிக்கிறோம் என்றார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உரையாற்றுகையில்,

சரத் பொன்சேகா தான் முதன் முதலில் யுத்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அன்று முதல் பல்வேறு தரப்பினரும் இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டை சுமத்த முய ன்றனர். ஆனால் புலிகளின் பங்காளியாகி யாவது ஆட்சி பீடமேற ஐ.தே.க. முயற்சி செய்கிறது.

பயங்கரவாதிகளின் அழுத்தத்திற்கு தலைசாய்த்து ஜனாதிபதியின் உரையை பிரித்தானியா ரத்துச் செய்தது. ஐந்து நட்சத்திர ஜனநாயகம் குறித்து பேசும் நாட்டில் நடத்த இந்த சம்பவத்தின் மூலம் எந்த நாட்டுக்கு அவமதிப்பு ஏற் பட்டது என்பது தெளிவுறுகிறது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறுகையில்,

மனிதாபிமான நடவடிக்கையின் போது ஐ.தே.க. அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இன்று இலங்கைக்கு எதிரான சர்வதேச சதிகளுக்கு கரு ஜயசூரிய பங்களித்துள்ளார். எனவே, அவர் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

இங்கு அமைச்சர் விமல் வீரவன்ச கூறியதாவது,

யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக அரசுடன் இணைந்து கரு ஜயசூரிய இன்று அரசின் மீது யுத்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யுத்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க வேண்டும் என புலி களும் சில வெளிநாடுகளுமே கோரி வந்தன. தற்பொழுது ஐ.தே.க. இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இது மிகப் பெரிய காட்டிக் கொடுப்பாகும். இவரின் கருத்து மூலம் புலிகளின் குரல் மேலும் பலமடை யும். யுத்தக் குற்றச்சாட்டு குறித்து தவறான கருத்து மேலும் உறுதியடையும். எனவே, இதற்கு எதிராக சகலரும் எழுச்சி பெறுவோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக