17 டிசம்பர், 2010

இந்தியாவுக்கு தல யாத்திரை செல்வோருக்கு இலவச வீசாஇலங்கையிலிருந்து இந்தியாவுக் குத் தல யாத்திரை மேற்கொள்கிற வர்க ளுக்கு இலவச வீசா வழங்கும் நடை முறை அமுல்படுத்தப் பட்டுள்ளது. இம் மாதம் முதலாந் திகதியிலிருந்து உடனடியாக அமு லுக்கு வரும் வகை யில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார்.


இலங்கையருக்கு ‘சிம் கார்ட்’ பெறுவதை
இலகுபடுத்தவும் ஏற்பாடு

‘கோபியோ’ அமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் நடத்திய பேச்சுவார்த் தையை அடுத்து இதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாத்திரை செல்பவர்கள் மத விவகார அமைச்சில் உறுதிக் கடிதமொன்றைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இலவச வீசாவைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தது பத்துப் பேராவது ஒரு தடவையில் யாத்திரை செல்வதாக உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை யர்கள் இந்தியா சென்றடைந்ததும் கைய டக்கத் தொலைபேசிக்கான ‘சிம் கார்டை’ பெறும் நடைமுறையை இலகு வாக்குவ தாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் இணக் கம் தெரிவித்ததாக பிரபா கணேசன் எம். பீ. தெரிவித்தார்.

இந்தியா செல்லும் இலங்கையர்கள் ஏற்கனவே பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதுபற்றி கோபியோ பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக