21 செப்டம்பர், 2010

தலைமன்னாருக்கான ரயில்பாதை நிர்மாணம் அடுத்தமாதம் ஆரம்பம் இரு வருடங்களில் வேலைகள் பூர்த்தி





மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடை யிலான ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் கூறியது.

ரயில் பாதை நிர்மாணிப்பதற்குத் தேவையான தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் மற்றும் பொருட்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான 106 கிலோ மீற்றர் நீளமான பாதையை மீளமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திட்டன.

இதன்படி முதற்கட்டத்தின் கீழ் மதவாச்சியில் இருந்து மடு வரையான 43 கிலோ மீற்றர் தூர வீதி மீளமைக்கப்படும். இதற்காக 81.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 149.75 மில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.

ரயில் பாதை நிர்மாணப் பணி களை இந்திய ரயில்வே நிர்மாணக் கம்பனி (இர்கொன்) மேற்கொள்ள உள்ளது.

இரு வருடங்களில் பாதை அமைக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக விஜய சமரசிங்க கூறினார்.

மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கு மிடையில் 5 பிரதான ரயில் நிலையங் களும் 5 உபரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்கப்பட உள்ளன.

மோதல் காரணமாக வடபகுதிக் கான ரயில் சேவைகள் முழுமையாக தடைப்பட்டன.

மதவாச்சிக்கும் தலைமன்னா ருக்குமிடையிலான ரயில் பாதை புலிகளால் தகர்க்கப்பட்டதையடுத்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கள் 1990 ஜூன் மாதம் இடைநிறுத் தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக