21 செப்டம்பர், 2010

சர்வதேச தலைவர்களின் உச்சிமாநாடு ஐ.நாவில் ஆரம்பம்

சர்வதேச கலந்து கொள்ளும் மூன்று நாள் உச்சிமாநாடு நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமானது.

இம் மாநாட்டில் 2015 ஆம் ஆண்டிற்குள் நிறைவுபெற வேண்டிய புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்படும்.

2000 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் புத்தாக்க உச்சிமாநாடு இடம்பெற்றது. அனைத்து அங்கத்துவ நாடுகளும் அதில் கலந்து கொண்டன. வறுமை, பசி, நோய் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தை 15 வருட காலத்துக்குள் நடத்தி குறிப்பிடத்தக்க சில இலக்குகளை நிறைவேற்ற வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டது.

பிள்ளைப் பேற்றின்போது தாய்மார் தேவையின்றி உயிரிழப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியை வழங்க முடிந்த வரை செயற்படுவது, ஆட்கொல்லி நோய்களை எதிர்த்து போரிடுவது, உலகளாவிய ரீதியில் தீவிர வறுமை மற்றும் பசிப் பிணிக்கு ஆளாகியிருக்கும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைப்பதற்கு முன்னுரிமை வழங்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளாகும்.

விதிக்கப்பட்ட கால எல்லையில் இன்னும் 5 வருடங்கள் மட்டுமே மீந்துள்ள நிலையில் சில நாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான நாடுகளில் இலக்குகள் எட்டப்படாத நிலையே காணப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கைகளின் படி உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற உணவு, சுவாத்தியம், எரிபொருள், பொருளாதார நெருக்கடி அண்மைக்கால அம்சங்கள் குறைபாடுகளுடன் கூடிய அறிக்கைகளில் மேலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்து ள்ளது.

எனவே வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நத்தை வேகத்தில் இடம்பெற்று வருவதையே காணமுடிகிறது.

எட்டு புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளில் பலவற்றை பெரும்பாலான நாடுகள் எட்ட முடியாத நிலையில் உள்ளன.

அபிவிருத்தி குறைந்த நாடுகள் ஏனைய நாடுகளின் தரை எல்லைகளால் சூழப்பட்ட நாடுகள் மற்றும் சில சிறிய தீவு நாடுகள் ஆகியவை இந்நிலையில் பலத்த சவால்களை எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை கள், கற்றுணர்ந்த பாடங்கள், இடைஞ்சல்கள் மற்றும் இடைவெளிகள், சவால்கள் மற்றும் இலக்குகளை செயற்படுத்துவதற்கு வழி காட்டும் வாய்ப்புகள் ஆகியவை பற்றி இந்த மூன்றுநாள் மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக