கராச்சி : ஷூ பாமுடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவனை கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
சிவில் இன்ஜினியரான பைஸ் முகமது (30) என்பவன் விமான நிலையத்துக்குள் வந்துள்ளான். விமானத்தில் ஏறுவதற்கு முன் அவனை சோதனை செய்தபோது சோதனை கருவி சத்தம் எழுப்பியது. சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக சோதனையிட்டதில் அவன் அணிந்திருந்த ஷூவில் நான்கு பாட்டரிகள் மற்றும் வெடிக்கச் செய்யும் ஒயர்களுடன், ஆப் மற்றும் ஆன் செய்யும் பட்டன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பைஸ் முகமதுவிடம் நடத்திய விசாரணையில், அவன் கராச்சியில் வசித்து வந்ததும் தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் மஸ்கட் செல்ல திட்டமிட்டதும் தெரியவந்தது.
விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது இந்த வெடிபொருளை வெடிக்கச் செய்திருந்தால் பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கும். ஆனால் இவனை விமான நிலையத்திலேயே கைது செய்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்கவாவில் இயங்கி வரும் தலிபான் மற்றும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என கராச்சி போலீசார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக