11 மே, 2010

அடையாளம் தெரிவதற்காக இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போடும் மாவோயிஸ்டுகள்





இந்தியாவில் 6 மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மிக வலிமையாக உள்ளனர். அவர்கள் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களை எதிர்த்து போரிடுவதற்காக பல்வேறு ரகசிய குழுக்களை உருவாக்கி உள்ளனர்.

இந்த குழுக்களில் எஸ்ஏஎஸ் என்றழைக்கப்படும் சிறப்பு நடவடிக்கை குழுவும் ஒன்று. இந்த குழுவில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இருப்பார்கள். இவர்கள் அனைவரும் அனைத்து வகை ஆயுதங்களையும் கையாள பயிற்சி பெறுகின்றனர். சமீபகாலமாக இவர்கள் தற்கொலை தாக்கு தலிலும் ஈடுபடுகிறார்கள்.

இந்த சிறப்பு குழுவில் எல்லா மாவோயிஸ்டுகளாலும் இடம் பெற இயலாது. துடிப்புள்ள இளைஞர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.

அவர்கள் தனித்து அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக சிறப்புக் குழுக்களில் உள்ள மாவோயிஸ்டுகளின் கைகளில் குறியீடு இடப்படுகிறது. இரும்பு கம்பியை காய்ச்சி சூடு போட்டு குறியிடப்படும்.

வலது கையின் கீழ்ப்பகுதியில் இந்த குறியீடும் நம்பரும் இடம்பெறும். ஒரு மாவோயிஸ்டு எந்த மாநிலத்தின், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை சூடு வைத்துள்ள குறியீடு மூலம் கண்டுபிடித்து விடலாம்.

சமீபத்தில் மேற்குவங்க போலீசாரிடம் சுசீல் ஹெம் பிராம் என்ற மாவோயிஸ்டு சிறப்பு குழு தீவிரவாதி சிக்கினான். அவனிடம் இருந்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக