11 மே, 2010

ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக நீக்கம் அமைச்சர் மைத்திரி







அரச வைத்தியசாலைகளில் நிலவி வரும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் 47 மருந்துவகைகள் நேற்று முன்தினம் முதல் ஆஸ்பத்திரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இரு வாரங்களில் மேலும் 97 வகை மருத்துகள் கிடைக்க உள்ளதோடு ஒரு மாதத்தினுள் மருந்துத் தட்டுப்பாடு முற்றாக தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

எதிர்வரும் காலத்தில் இவ்வாறான மருந்துத் தட்டுப்பாடுகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் ஆஸ்பத்திரிகளில் காணப்படும் மருந்துத் தட்டுப்பாடு சுமூக நிலைக்கு வரும்.

மருந்துக் கம்பனிகள் தொடர்பிலும் உரிய நடைமுறைகளை பின்பற்ற உள்ளோம். தேவையான மருந்து வகைகளை விமானப் படை விமானம் மூலம் தருவிக்க ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளரும் அனுமதி வழங்கியுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக