யுத்தமற்ற அமைதிச் சூழலை வாய்ப்பாக்கிக் கொண்டு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென பிரதி நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
ஆசியாவின் முன்னோடி நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை நிதியமைச்சின் மூலம் வழங்குவதாக தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார கேந்திரமாகவுள்ள நிதியமைச்சின் செயற்பாடுகளை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளப் போவ தாகவும் தெரிவித்தார்.
புதிய பிரதிநிதியமைச்சரான கலாநிதி சரத் அமுனுகம நேற்று நிதியமைச்சில் தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றார்.
நேற்றுக்காலை சுபவேளையில் மத அனுஷ் டானங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரி வித்ததாவது,
நாட்டில் நிலவிய யுத்த சூழல் கார ணமாக சர்வதேச நாடுகள் எமக்கு உதவு வதற்கு முன்வராத காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
யுத்தம் நிலவிய காலத்தில் அரச அதிகாரிகளின் மனநிலையும் சரியானதாக இருக்கவில்லை. தற்போது சிறந்த சூழல் உருவாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வழி வகுத்துள்ளார்.
இன்றைய சூழல் நாட்டைப் பொரு ளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டி யெழுப்ப மிகவும் உகந்ததாகவுள்ளது. அரச அதிகாரிகள் தம் அர்ப்பணிப்புடனான சேவையினால் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர நாட்டின் பொருளாதார ஏற்றத்தை நிர்ணயிக்கும் நிதியமைச்சில் சரத் அமுனுகம போன்ற நிர்வாகத்திறன் மிக்க அமைச்சர்கள் பங்கேற்பது மிகச் சிறந்ததொன்றாகும்.
நாடு சுனாமி பேரழிவினால் சிக்கித்தவித்த வேளையில், அப்போதும் பிரதி நிதி யமைச்சராகவிருந்து தேசிய சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக்கொள்ள தமது திறமையைப் பயன்படுத்தியவர் அமைச்சர் சரத் அமுனுகம.
நிர்வாகத்திறன் கொண்ட அமைச்சர்களில் இவர் முக்கியம் பெறுபவர் எனவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக