11 மே, 2010

500 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாரம் பெற்றோரிடம் ஒப்படைப்பு





புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இவ்வாரம் தமது பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இம்மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெற்றிவாரம் கொண்டாடப்படவுள்ள அதேசமயம் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஐநூறு பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள ஐநூறு பேரில் சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சாதாரண பொது மக்களும் அடங்குவர் என்றும் குறிப்பிட்டார்.

நாளாந்தம் சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான சகல பயிற்சிகளும் இவர்களுக்கு வழங்கப்ப ட்டுள்ளதுடன் போதிய வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

உளவியல் ரீதியில், விசேட பயிற்சிகளும், ஆளுமை, தலைமைத்துவம், குழுச் செயற்பாடு, விளையாட்டு ஆகிய துறையில் போதிய பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொருத்தமானவர்கள் என அடையாளங் காணப்பட்டவர்களே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக