தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிக்கு, காஷ்மீர் மாநிலத்தைப் போல சுயாட்சி அதிகாரம் அளிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் பா.ம.க. சார்பில் திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
சென்னை, சின்னமலைப் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.வினர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்று, மெழுகுவர்த்தியேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அந்நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:
இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழினம் தோல்வியடைந்ததாக வரலாறு இல்லை. தமிழ் ஈழம் மலர வேண்டும் என்ற எழுச்சி உலகெங்கும் உள்ள பல கோடி தமிழர்களிடம் இப்போது காணப்படுகிறது. எனவே, தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகியே தீரும்.
இப்போது உடனடித் தேவையாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை ஒன்றிணைத்து, சுயாட்சி அதிகாரம் பெற்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும். அந்த சுயாட்சி என்பது இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரத்தைப் போன்றதாக இருக்க வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க வேண்டும்.
சுயாட்சி பெற்ற மாநிலம் என்பது தாற்காலிக ஏற்பாடாகவே இருக்க வேண்டும். இனி இலங்கையில் சிங்களர்களும், தமிழர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை. எனவே, தனித் தமிழ் ஈழமே இறுதித் தீர்வாக அமையும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக, பா.ம.க. தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தன் கடமையைச் செய்து வந்துள்ளது. அந்தக் கடமை இனியும் தொடரும் என்றார் ராமதாஸ்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக