8 ஏப்ரல், 2010

நுவரெலியா மாவட்டத்தில் இராணுவம் சேவைக்கு அழைப்பு; குழப்பம் விளைவித்தால் வாக்களிப்பு ரத்து - அரச அதிபர்


நுவரெலியா மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படு த்தும் வகையில் பொலிஸாருடன் இராணுவத்தினரையும் பாதுகாப்புக் கடமையில் அமர்த்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான டபிள்யூ. பீ. ஜீ. குமாரசிறி தெரிவித்தார்.

மாவட்டத்தின் பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களின் பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளின் பாதுகாப்புக்கென சுமார் இரண்டாயிரம் பொலிஸாரும் 150 இற்கும் அதிகமான இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

ஏதாவதொரு வாக்குச்சாவடியிலோ அல்லது ஓர் இடத்திலோ தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுக் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பு ரத்துச் செய்யப்படும் என்று தெரிவித்த அரச அதிபர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படு மென்றும் கூறினார்.

தேர்தலை அமைதியாக நடத்துவதற்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் பொலிஸாரையும் படையினரையும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுமக்களை நேரகாலத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறும் குழப்பகரமான நிலை தோன்றுவதற்கு இடமளிக்கக் கூடாதென்றும் தெரிவத்தாட்சி அதிகாரி குமாரசிறி கேட்டுக்கொண்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக