17 மார்ச், 2010

3 தினங்களுக்குள் 50 வீத சுவரொட்டிகள், பதாகைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன

பிரதி பொலிஸ் அதிபர் காமினி நவரட்ண கூறுகிறார்



கடந்த மூன்று தினங்களுக்குள் ஐம்பது வீதமான தேர்தல் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்டவுட்டுகளை பொலிஸார் அகற்றியுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.

எஞ்சியுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றும் பணிகள் துரிதப்படு த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைகளுக்கு அமைய பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டலில் இந்த நடவடி க்கைகளை பொலிஸ் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகளை பொலிஸார் கண்டிப்பாக அமுல்படுத்தி வருவ தாக தெரிவித்த அவர், இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

துரிதமாக அகற்றும் பணிகளில் 1320 தொழிலாளர்கள் நாடு முழு வதிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 106 முறைப் பாடுகளே பதிவு செய்யப்பட்டுள் ளதாக தெரிவித்த அவர், இது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளமையை காண முடிகின்றது என்றார்.

இதேநேரம், இதுவரை பாரிய அசம் பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக