17 மார்ச், 2010

தடம்புரண்ட ரயிலைத் திருத்துவதற்குச் சென்ற ரயில் அந்த ரயிலோடு மோதியதில் 13 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.





கடுகண்ணாவையில் சம்பவம்; கொழும்பு - பதுளை சேவை இடை நிறுத்தம்

இச்சம்பவம் நேற்று கண்டி கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் கடுகண்ணாவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அத்தியட்சகர் விஜய அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, கண்டி கடுகண்ணாவ- பிலிமத்தலாவ ரயில் நிலையங்களுக்கிடை யில் நேற்று முன்தினம் ரயிலொன்று தடம்புரண்டதால் அதனைச் சீரமைக்கும் பணிகள் முடிவடையும் வரை கண்டி, பதுளைக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி ரயில் கடுகண்ணாவ பகுதியில் தடம் புரண்டது. கொழும்பிலிருந்து விசேட பணிகளுக்காக பிப்ரேக் டவுன்பீ ரயிலொன்று பணியாளர்களுடன் அனுப்பப்பட்டது. அந்த ரயிலே மோதியுள்ளது.

கொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் கடுகண்ணாவை வரையே செல்லுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக