17 மார்ச், 2010

விருப்பு வாக்குகளுக்காக மோதும் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை

மீறினால் அமைச்சு, உயர் பதவிகள் கிடைக்காது ஜனாதிபதி அறிவித்துள்ளதாக மைத்திரி தகவல்



விருப்பு வாக்குக்காக மோதலில் ஈடுபடும் ஐ.ம.சு முன்னணி வேட்பாளர் களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதல்களில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு தேர்தலின் பின்னர் அமைச்சுப் பதவிகளோ அல்லது வேறு உயர் பதவிகளோ வழங்கப்படமாட் டாது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன கூறினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரி வித்த அமைச்சர், சில மாவட்டங்களில் ஐ. ம. சு. முன் னணி வேட்பாளர்கள் விருப்பு வாக்குக்காக மோதிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எனக்கும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக