அரசியல் வங்குரோத்து தெட்டத்தெளிவாகிறது
மஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை பிரதி செய்தே (நகல் பிரதிகள்) ஐ. தே. க.வும் ஜே. வி. பி.யும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரித்துள்ளன. இதன் மூலம் அவை அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ளது தெளிவாகிற தென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஐ. தே. க.வும் ஜே.வி.பி.யும் தமது தேர்தல் விஞ்ஞானபங்களை வெளியிட்டு ள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக தேர்தல் விஞ்ஞாபனம் வெளி யிட்ட அந்தக் கட்சிகள் இம்முறை தனித்தனியாக தேர்தல் விஞ்ஞா பனம் வெளியிட்டுள்ளன.
மேற்படி விஞ்ஞாபனங்கள் மஹிந்த சிந்தனை தொலைநோக் கின் அடிப்படையிலே தயாரிக்கப்ப ட்டுள்ளன. ஹிந்திப் பாடல் மெட்டு களை சிங்களத்தில் பிரதி செய்வது போல மஹிந்த சிந்தனை தொலை நோக்கு பிரதி செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் தொகையை தமது ஆட்சியில் குறைத்த ரணில், அவர்கள் குறித்து தமது விஞ்ஞா பனத்தில் கூறியிருப்பது நகைப்புக் குரியதாகும்.
1978 இல் புதிய அரசியல் யாப்பை ஐ. தே. க.வே கொண்டு வந்தது. இன்று தாம் அரசியல் யாப்பை மாற்றப் போவதாக ஐ. தே. க. கூறுகிறது.
ஐ. தே. க.வினதும் ஜே. வி. பி.யினதும் தேர்தல் விஞ்ஞாபன ங்கள் வெறும் தேவதைக் கதைக ளைப் போன்றே உள்ளது. 2001ல் ரணில் முன்வைத்த தேர்தல் விஞ் ஞானத்தின் மூலம் அரச சொத்துகள் விற்கப்பட்டதோடு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத் தனர்.
எனவே, ரணில் வாக்குறுதிகள் குறித்து மக்கள் நன்கு உணர்ந்து ள்ளனர். அவரிடம் மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள். 2001 - 2004 ஐ. தே. க. ஆட்சியிலே வாழ்க்கைச் செலவு அதிகரித்தது.
அரச சொத்துக்கள் தனியார் துறை க்கு குறைந்த விலைக்கு விற்கப்ப ட்டன.
ஆனால் 1977ம் ஆண்டின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மட்டுமே தனியார் மயமாக்கல் இடம்பெறவில்லை. 1977இன் பின் வந்த ஐ. தே. க., சு. க. என சகல அரசுகள் அரச சொத்துக்களை விற் றன.
உள்நாட்டு உற்பத்திகளை ஊக்கு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ள விவசாயத் துறையும் மேம் படுத்தப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக