5 மார்ச், 2010

அவுஸ்திரேலியா செல்ல முயற்சி:
சிலாபம், உடப்பு இளைஞர்கள் 21 பேர் மட்டக்களப்பில் கைது



சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு எத்தணித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சிலாபம், உடப்பு பகுதியைச் சேர்ந்த 21 இளைஞர்கள் மட் டக்களப்பில் நேற்று கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரி வித்தார்.

மட்டக்களப்பு, நாவலடி பகுதியில் கடற்கரையோரமாக அவர்களை ஏற்றிச் செல்வதற்கு வள்ளம் வரும் வரை காந்தி ருந்த சமயமே இவர்கள் 21 பேரும் கைதாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். சந்தேக நபர்கள் பயணம் செய்ததாக கருதப்படும் வேன் ஒன்று, கடல் வழிப்பாதையை கண் டறியக் கூடிய வரை படங்கள், உணவு வகைகள், பணம், உடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு 234 ஆவது படையணியின ரும் மட்டக்களப்பு பொலிஸாரும் இணைந்தே இவர்களை கைது செய்துள்ளனர். காத்திருந்தும் வள்ளம் வராத காரணத்தினால் நாளை புறப்படலாம் என்ற எண்ணத்தில் நாவலடி வீடொன்றினுள் இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் வாக்கு முலங்களும் பெறப்பட்டன. உடப்பு கிரா மத்து இளைஞர்கள் கைது செய்யப்பட் டுள்ளமை தொடர்பாக சிலாபம் பொலிஸ் நிலையத்துக்கும் அறிவித்தல்கள் விடுக் கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக