5 மார்ச், 2010

இந்திய இசை மேதை ரவிசங்கர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேச்சு




இலங்கைக்கு விஜயத்தை மேற் கொண்டுள்ள உலகப் பிரசித்திபெற்ற இந்திய இசை மேதை ரவி சங்கர் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடி னார்.

இந்தச் சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது.

ரவி சங்கர் சர்மாவின் இலங்கை விஜயம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவரை வாழ்த்தி ஞாபகச் சின்னமொன்றை யும் பரிசளித்தார்.

இந்நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றதுடன் கலாசார மரபுரி மைகள் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ் வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பிறந்த ரவிசங்கர் சர்மா ஆசியாவில் மட்டுமன்றி முழு உலகிலுமுள்ள இசை ரசிகர்களின் அபிமானத்தையும் கெளரவத்தையும் பெற்றுக்கொண்டவர். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை யமைத்தவர்.

தமது இசைப்பணிக்காக புபிலிம் பெயார்பூ விருது உட்பட பல்வேறு விருதுகளைச் சுவீகரித்துக் கொண் டவர்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ள இவரது பிகீத் மாதுரி 2010பீ இசை நிகழ்ச்சி நாளை 7ம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள் ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக