அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகனில் மர்ம மனிதன் சரமாரி துப்பாக்கிசூடு:
.2 பேர் படுகாயம்அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பென்டகன் தலைநகரம் வாஷிங்டனை ஒட்டி உள்ளது. இங்கு பல்லாயிரக்கணக்கான ராணுவ அதிகாரிகள், ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்துக்கு மொத்தம் 5 பிரதான நுழைவு வாயில்கள் உண்டு. இதில் ஒரு வாயில் மெட்ரோ ரெயில் நிலையத்தையொட்டி உள்ளது.
இங்கு மாலை 6.40 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் வந்தார். வாசலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று உள்ளே செல்ல வேண்டும் என்றார். அவரிடம் இதற்கான அனுமதி அட்டைகளை கேட்டனர்.
அப்போது அவர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தானியங்கி கைத்துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 2 அதிகாரிகள் குண்டு பாய்ந்து கீழே சாய்ந்தனர்.
உஷார் அடைந்த மற்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நோக்கி சுட்டனர். அதில் அவர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனே அவரை மடக்கி பிடித்தனர்.
காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 2 ராணுவ அதிகாரிகளும் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டனர். மர்ம வாலிபர் ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
அவர் யார்? எதற்காக சுட்டார்? என்று தெரியவில்லை. அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இது பற்றி அமெரிக்க போலீசார் எந்த தகவலையும் வெளியிட மறுத்துவிட்டனர். அந்த நபர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக