பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. குறித்து பேசத் தயார்: பேர்னாட் சாவேஜ்
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பாகவும், ஏனைய -->விடயங்கள் குறித்தும் பேசத் தயார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்த கருத்துக்களை இலங்கை பின்பற்றினால் இந்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இருக்காது எனத் தெரிவித்த சாவேஜ், எந்த நாட்டையும் சிரமத்திற்குள்ளாக்குவது ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமல்ல எனவும் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை நிறுத்தம் அடுத்த ஓகஸ்ட் மாதத்தில் நடைமுறைக்கு வர இருக்கிறது என்றும் இதற்கு முன்னர் இந்தப் பிரச்சினையைச் சாதகமாகத் தீர்க்கலாம் எனத் தான் நம்புவதாகவும் சாவேஜ் மேலும் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக