பொதுத் தேர்தலையொட்டி தேசிய அடையாள அட்டை விநியோகத்தைத் துரிதப்படுத்தியுள்ளதுடன் இவ்வருடத்தில் பத்து இலட்சம் அடையாள அட்டைகளை விநியோகிக்கும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆட் பதிவுத் திணைக்கள ஆணையாளர் தர்மதாச தெரிவித்தார்.
இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய அடையாள அட்டை இல்லாதோருக்கென நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முறை தேர்தலில் வாக்களிப்ப தற்கும் அது செல்லுபடியாகுமெனவும் குறிப்பிட்டார்.
அடையாள அட்டை குறித்து மேலும் தெரிவித்த அவர்; கடந்த வருடத்தில் 9 இலட்சத்து 41,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் பத்து இலட்சம் அடையாள அட்டைகளை எம்மால் விநியோகிக்க முடிந்துள்ளது.
2008, 2009ம் ஆண்டுகளில் கிடை க்கப்பெற்ற விண்ணப்பங்களுக் கிணங்க பெருமளவிலான தேசிய அடையாள அட்டைகள் விநியோகி க்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக