5 மார்ச், 2010

பெட்டக விவகாரத்தில் புதிய திருப்பம் திலகரட்னவுக்கு பணம் வழங்கிய வர்த்தகருக்கு பகிரங்க பிடியாணை



இன்டர்போலின் உதவியை நாடுமாறு நீதிமன்றம் உத்தரவு

சரத் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்ன தனியார் வங்கிப் பெட்டகங்களில் வைத்திருந்த பெருந்தொகைப் பணத்தை வழங்கியதாகக் கூறப்படும் வர்த்தகரைக் கைதுசெய்ய நீதிமன்றம் பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பரிசோதகர் மொஹான் மசிம்புல கல்கில்ஸை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று (05) இடம்பெற்றபோதே கல்கிஸை பிரதம நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான ஹர்ஷா சேதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார். வங்கிப் பெட்டகங்களிலிருந்து மீட்கப்பட்ட பணத்தை இரண்டாவது சந்தேக நபரான வர்த்தகர் சுஜீவ குமார வழங்கியுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் நாட்டைவிட்டுச் சென்றுள்ளதாகவும் சீ. . டி. பரிசோதகர் நீதிமன்றில் கூறினார்.

இதனையடுத்து குறித்த வர்த்தகரைக் கைதுசெய்ய பிஇன்ரபோலிபீன் உதவியையும் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வர்த்தகர் இராஜகிரிய, பழைய நாவல வீதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

தனியார் வங்கிப் பெட்டகத்தில் இருந்து வெளிநாடுகளின் நாணயத் தாள்கள் உட்பட 75 மில்லியன் ரூபாய் பணம் மீட்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தப் பணத்தைப் போக்குவரத்து செய்ததாக நம்பப்படும் பிடிபென்டர்பீ வாகனமொன்றையும் கைப்பற்றியிருந்தனர்.

இந்தக் கறுப்பு டிபென்டர் வாகனம் நேற்று நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதனை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன கடந்த 2008 பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இராணுவ ஏலத்தில் குறித்த வாகனத்தைப் பெற்றுக்கொண்டு ள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரிலேயே அவர் வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார். அப்போது சரத் பொன்சேகாவே இராணுவத் தளபதியாக இருந்தார்.

எனவே, திலகரட்ன எவ்வாறு வாகனத்தைக் கொள்வனவு செய்தார் என்பதைக் கண்டறிய விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணப் பெட்டக வழக்கில் முன்பு சீ. . டி. யினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமதி அசோகா திலகரட்ன பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். அவரை எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சீ. . டி. யினரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குறித்த தனியார் வங்கியின் முகாமையாளருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக