இறுதிப் போரி
ல் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலகச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் நடுப் பகுதியில் பகிரங்க அறிக்கையாக வெளியிடப்படவுள்ளது. அறிக்கையின் பிரதி பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாத இறுதியிலேயே சமர்ப்பிப்பதற்குத் தயாராகி இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் பான் கீ மூனுடனும் நிபுணர் குழுவினருடனும் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் பின்னர் அறிக்கையைக் கையளிக்கும் திகதி பிற்போடப்பட்டது. எனினும் அந்த அறிக்கை இந்த மாத நடுப்பகுதியில் ஐ.நா. பொதுச் செயலரிடம் உறுதியாகக் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த அறிக்கை பகிரங்க ஆவணமாக அனைத்துத் தரப்பினரும் பெறுவதற்கு வசதியாக வெளியிடப்படவும் உள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையும் அதற்கு ஆதரவான வகையிலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ல் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலகச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் நடுப் பகுதியில் பகிரங்க அறிக்கையாக வெளியிடப்படவுள்ளது. அறிக்கையின் பிரதி பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாத இறுதியிலேயே சமர்ப்பிப்பதற்குத் தயாராகி இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் பான் கீ மூனுடனும் நிபுணர் குழுவினருடனும் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் பின்னர் அறிக்கையைக் கையளிக்கும் திகதி பிற்போடப்பட்டது. எனினும் அந்த அறிக்கை இந்த மாத நடுப்பகுதியில் ஐ.நா. பொதுச் செயலரிடம் உறுதியாகக் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த அறிக்கை பகிரங்க ஆவணமாக அனைத்துத் தரப்பினரும் பெறுவதற்கு வசதியாக வெளியிடப்படவும் உள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையும் அதற்கு ஆதரவான வகையிலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட சண்டையில் பத்துக்கு மேற்பட்டவாகள் காயங்களுக்கு உள்ளாகியதுடன் பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டதுடன் மற்றுமொரு தனியார் பஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
யில் இருந்து கொழும்புக்குச் செல்வதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.



கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்களுடைய காணிக்குரிய அனுமதிப்பத்திரங்கள் பல ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருப்பது தொடர்பாகவும் இவ் விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறும் கூறி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக்க பண்டார தென்னக்கோனின் கவனத்திற்கு கொண்டுவரும் முகமாக கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார்.
