18 மார்ச், 2011

தெற்காசிய சுகாதார பராமரிப்பு உச்சி மாநாடு கொழும்பில்


தெற்காசிய சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதற்கான உச்சி மாநாடு அடுத்த மாதம் 6ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார்.

இந்த மாநாட்டில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 500 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இப்பிரதேசத்தின் சில நாடுகள் மிகக் குறைந்தளவு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. உதாரணமாக நேபாளத்தில் 31 சதவீதமும் இந்தியாவில் 31 சதவீதமுமான நிலையில் இலங்கையின் வசதிகள் அதி உச்சமான 91 சதவீதத்தை எட்டியுள்ளன.

இந்நாடுகளில் தீர்மானம் மேற் கொள்பவர்கள், கொழும்பிலுள்ள சினமன் கிறாண்ட் ஹோட்டலில் ஏப்பிரல் 4 தொடக்கம் 7 ஆம் திகதிவரை இந்த மாநாட்டில் ஒன்று கூடி அடிப்படை சுகாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் பற்றி தீர்மானம் மேற்கொள்ளுவார்கள்.

இச் சந்திப்பில் பங்கேற்கும் நாடுகளாவன: ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை ஆகும். இப்பிரதேசத்தில் சுகாதார பராமரிப்புக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்கள், ஏப்பிரல் மாதம் 6ஆம் திகதி, அமைச்சர்கள் மட்டத்திலான உச்சி மகாநாடொன்றில் கலந்துகொள்வார்கள். இம்மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படும்.

முதலாவது சுகாதாரப் பராமரிப்பு சம்பந்தமான தெற்காசிய மாநாடு 2003 ஆம் ஆண்டில் பங்களாதேஷிலும் இரண்டாவது மாநாடு 2006 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலும் மூன்றாவது மாநாடு 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலும் நடைபெற்றன. இம் மாநாடு வெவ்வேறு கருத்துடையவர்களுக்கிடையே நிகழும் சொல்லாடலுக்கான தனது மேடையாகும். அத்துடன், ஐக்கிய நாடுகளில் பிரகடனப்படுத்தப்பட்ட புத்தாயிரம் அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமான இப்பிராந்தியத்தின் சுகாதாரப் பராமரிப்புக் குறிக்கோள்களை எய்துவதற்கான சுகாதார மேம்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக