234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுத லான ஆசனங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது.
நடந்த தேர்தலின் முதலாவது உத்தி யோகபூர்வ முடிவு நேற்று இரவு 10.40 அளவில் வெளியாகியது.
இதன்படி, மாத்தறை மாவட்டம் வெலிகம நகர சபையின் முடிவுகள் முதலில் வெளியாகின. இதில் ஐ. ம. சு. மு. 7,246 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ. தே. க. 3,622 வாக் குக ளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றது.
ஜே. வி. பிக்கு 164 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. வெலிகம நகர சபையில் 2006 இல் ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ஜே. வி. பி. இந்தத் தேர்தலில் ஆசனம் எதனையும் பெறவில்லை.
இதே நகர சபையில் போட்டி யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மட்டுமே பெற்றது.
அடுத்து குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டிய நகர சபையை ஐ. தே. க. மீண்டும் கைப்பற்றியுள்ளது. 1745 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைக் கைப்பற்றியது.
அதேநேரம் ஐ. ம. சு. மு. 1370 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங் களை தக்கவைத்துக் கொண்டுள் ளது.
கண்டி மாவட்டம், வத்தேகம நகர நகரசபை மீண்டும் ஐ. ம. சு. மு. வசமாகியுள்ளது. ஐ. ம. சு. மு. 2177 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐ.தே.க. மூன்று ஆசனங்களை பெற்றது. அதே நேரம் சுயேச்சைக் குழுவொ ன்று 479 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது.
மாத்தறை மாவட்டம், கிரிந்த புகுல்வெல்ல பிரதேச சபையை ஐ. ம. சு. மு. கைப்பற்றியுள்ளது. 8,276 வாக்குகளைப் பெற்று 05 ஆசனங் களை ஐ. ம. சு. மு. பெற்றுள்ளது. 2006 உடன் ஒப்பிடும் போது மேலதிகமாக ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது (ஐ. ம. சு. மு). ஏற்க னவே இருந்த ஒரு ஆசனத்தையும் ஜே- வி. பி. இழந்துள்ளது. 319 வாக்குகளை மாத்திரமே அது பெற் றுள்ளது.
பதுளை மாவட்டம், ஹப்புத் தளை நகர சபையையும் ஐ. ம. சு. முன்னணியே கைப்பற்றியுள்ளது. 1205 வாக்குகளைப் பெற்று 06 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேநேரம் ஐ. தே. க. 703 வாக்கு களைப் பெற்று 03 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்த சபையில் 07 ஆசனங்களுடன் இருந்த ஐ. ம. சு. மு. ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. ஐ. தே. கட்சிக்கு ஒரு ஆசனம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
நேற்று நள்ளிரவு வரை வெளி யான முடிவுகளின்படி ஐ. ம. சு. முன்னணியே கூடுதலான ஆசனங்க ளைப் பெற்றிருந்தது.
234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் 55 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணி வரை இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக