18 மார்ச், 2011

கண்டி மாவட்டத்தில் 60 வீதம் வாக்களிப்பு

கண்டி மாவட்டத்தில் 55 முதல் 60 சத வீதம் மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கண்டி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்ட செயலாளருமான காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் 16 சபைகளுக்கான உள்ளூராட்சி தேர்தல் நேற்று (17) நடைபெற்றது.

நேற்று பகல் வரையும் 25% சதவீதம் வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருந்த போதிலும் பிற்பகல் 4.00 மணிவரையும் சராசரியாக 55%- 60% சதவீதமான வாக்காளர்கள் தமது வாக்குகளை அளித்திருந்ததாக தெரியவருவதாகக் கூறினார்.

மேலும் கண்டி மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த வித தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை. மிகவும் சுமுகமான நிலையில் மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் பாதுகாப்பு பணிகள் மிகவும் தீவிரமாக இருந்தன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்கள் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் தமது கடமைகளை மேற்கொண்டிருந்ததை காண முடிந்தன.

மலும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகளையும் கடமையில் இருந்த அதிகாரிகளையும் எடுத்துச் செல்ல விசேட போக்குவரத்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தனவாகவும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக