18 மார்ச், 2011

வெற்றிலை ஏற்படுத்திய சர்ச்சை




மெல்லுவதற்காக கையில் வைத்திருந்த வெற்றிலையை கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் மல்லுக்கு நின்ற சம்பவம் ஒன்று ரத்கமை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

ரத்கமை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் ஐ. ம. சு. மு வின் கட்சி முகவராக செயற்பட்ட நபர் ஒருவர் பொழுது போக்குக்கு மெல்லுவதற்காக ஒரு சில வெற்றிலைகளை கையில் வைத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட பிறகட்சிகளின் முகவர்களும் ஆதரவாளர்களும் ஐ. ம. சு. மு. வின் தேர்தல் சின்னமான வெற்றிலையை வாக்களிப்பு நிலையத்தில் கட்சி முகவர் ஒருவர் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் இது வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு கூறுவது போலமையும் எனவும் குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்தது குறிப்பிட்ட ஐ. ம. சு. மு. தேர்தல் முகவருடன் வீண் வம்புக்குச் சென்றனர்.

எனினும், பொறுமையான பதிலளித்த ஐ. ம. சு. மு. முகவர், மெல்லுவதற்காகவே வெற்றிலையை தான் கையில் வைத்திருந்ததாக கூறியதுடன் பிற கட்சிக்காரர்களுடனான வீண் விவாதங்களை தவிர்ப்பதற்காக உடனடியாகவே அவ் வெற்றிலைகளை மென்று விழுங்கிவிட்டார்.

அதன்பின் பிறகட்சிக்காரர்களின் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த பிரஸ்தாப தேர்தல் முகவர்; வாக்களிப்பு நிலையங்களில் கதிரையுட்பட்ட பல்வேறு பொருட்கள் பாவனையில் உள்ளன.

அவை கூட ஏதே ஒரு கட்சியின் தேர்தல் சின்னமாக இருப்பதால் அவற்றையும் உடனடியாக வாக்களிப்பு நிலையங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன் இதே தோரணையில் பிறகட்சி ஆதரவாளர்கள் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளும் நியாயமற்றது என்று நிரூபித்துக் காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக