17 பிப்ரவரி, 2011

தமிழக மீனவர்கள் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


வடமராட்சி, ஒரே தாய்மொழியினை பேசுவது மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டுவதுடன் சட்டம் தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது எமது கடமை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டின் வட பகுதி கடற்பரப்பினுள் நுழைந்து தொழில் செய்தார்கள் என்ற காரணத்தினால் 112 தமிழக கடற்றொழிலாளர்கள் வடராட்சி மீனவர்களால் பருத்தித்துறை கரைக்கு கொண்டு வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் வசமிருந்த 18 இழுவைப் படகுகளும் இலங்கை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு அவைகள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக