17 பிப்ரவரி, 2011

மீனவர் கைதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் கனிமொழி உட்பட 1000 பேர் கைது




பருத்தித்துறை, முனை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிரு ந்த இந்திய மீனவர்கள் 112 பேர் கைது செய்யப் பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையி லுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி. மு. க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் எம். எல். ஏ. க்கள் உட்பட ஆயிரம் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தின் நாகை, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 112 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது பருத்தித்துறைமுனை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் கையளிக் கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவத்தைக் கண் டித்தும், இலங்கைக் கடற்படையினர்தான் இச்செயலைச் செய்திருப்பதாகவும் கூறி சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்காவில் இருந்து மாநிலங்களவை உறுப் பினர் கனிமொழி தலைமையில் ஆயிரக் கணக்கான திமுகவினர் ஊர்வலமாக சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தைச் சென்றடைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை இலங்கை கடற்படை உடனடியாக நிறு த்திக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த கனிமொழி, தாக்குதலை உடனடியாக நிறுத்தாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் கூறினார். ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

அதேநேரம், தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பதை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் கண்டித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு ள்ளன. டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங் இக்கண்டனத்தை வெளியிட்டிருப்பதாக இந்திய ஊடகச் செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இந்திய வெளியுறவுச் செயலாளரை அனுப்பி இலங்கைக்கு ஏற்கனவே இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது என்றும், தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் மன்மோகன் சிங் கூறியிருப்பதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக அரசியல்வாதிகள் தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீவிரப ப்டுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக