காலி - மாத்தறை இடையி லான அதிவேக ரயில் சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப் பட்டது.
இது தொடர்பான பிரதான வைபவம் மாத்தறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. காலி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த விழாவின் பிரதம அதிதிகளான போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா அடங்கலான அதிதிகள் விசேட ரயில் மூலம் மாத்தறையை வந்தடைந்தனர்.
இந்திய கடனுதவியுடன் கொழும்பு - மாத்தறை இடையிலான ரயில் பாதை புனரமைக்கப்படுகிறது. முதற் கட்டமாக காலி - மாத்தறை இடையிலான ரயில் பாதை நவீன முறையில் மீளமைக்கப் பட்டுள்ளது. காலி – மாத்தறை இடையில் பயணம் செய்வதற்கு முன்னர் சுமார் 1 1/4 மணி நேரம் பிடிக்கும். ஆனால் ரயில் பாதை மீளமைக்கப்பட்டதையடுத்து காலியில் இருந்து மாத்தறையை வந்தடைய 38 நிமிடங்களே பிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ரயில் பாதை திறக்கப்படுவதை முன்னி ட்டு காலி ரயில் நிலையத்தில் மத அனுஷ்டானங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் குமார வெல்கம, இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பெய ர்ப்பலகையை திறந்து வைத்தனர்.
காலி – மாத்தறை இடையிலான ரயில் பாதை இந்தியாவின் இர்கொன் கம்பனியூடாக நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பணிகள் 6 மாத காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. இதனையொட்டி காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டிருந்தன. இன்று முதல் காலி – மாத்தறை இடையிலான ரயில் சேவை வழமை போல இடம்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக