29 டிசம்பர், 2010

பாதிரியார் விவகாரம்: வவுனியா சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது

undefined


மன்னார் சிறுவர் இல்லத்திலுள்ள சிறுமியர் இருவரை பாலியல் குற்றம் புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைக்கு அழைத்துவரப்பட்ட பாதிரியாரை கைதிகள் கடுமையாகத் தாக்கியதையடுத்து தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இதனால் மன்னார், வவுனியா, அநுராதபுரம் ஆகிய நீதிமன்றங்களுக்கு கைதிகள் அழைத்துச்செல்லப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.சிறுமி மீது பாலியல் குற்றம்: பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் தாக்குதல்

(இணைப்பு 01)

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் இருவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாதிரியாரை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்ற நீதவான் கே.ஜீவராணி உத்தரவிட்டார். அதன்பிரகாரம் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வேளை அவரை ஏனைய கைதிகள் தாக்கியுள்ளனர்.

இதனால் சிறைச்சாலையில் பதற்றம் நிலவியது. அதன்பின்னர் அங்கு விரைந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது கைதிகள் இருவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக