19 டிசம்பர், 2010

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புகளை செய்யத் தயார்






நாட்டுக்காகவும், மக்க ளுக்காகவும் எத்தகைய அர்ப்பணிப்புகளைச் செய்யவும் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரி வித்தார்.

மக்களுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்ததால் தமது சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி இதனைச் சிலர் உணரத் தவறுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறெனினும் நாட்டைக் காட்டிக்கொடுக்க இனி ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் அம்பாந்தோட்டை விவசாய தொழில்நுட்ப கிராமிய விஞ்ஞான நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு

உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஷானிகா ஹிம்புரேகம உட் பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

விவசாயத்தில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு. வெளிநாட்டிலிருந்து கிழங்கோ, வெங்காயமோ அல்லது அரிசியோ இறக்குமதி செய்ய முடியும். இலங்கையில் உற்பத்தி செய்வதைவிட குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். இத்தகைய கொள்கையைக் கடைப்பிடித்ததாலேயே கடந்த காலங்களில் விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்கு நிதியொதுக்குதல் நிறுத்தப்பட்டன.

எமது அரசாங்கம் அவ்வாறு சிந்திக்கும் அரசாங்கமல்ல. உள்ளூர் விவசாயிகளை ஊக்குவித்த உணவு உற்பத்தியில் நாட்டை தன்னிறைவுக்குக் கொண்டு வருவதே எமது நோக்கம். அந்த நோக்கத்திற்காகவே உரமானியம் உட்பட பல்வேறு நிவாரணங் களையும் ஊக்குவிப்புகளையும் நாம் விவ சாயிகளுக்கு வழங்கி வருகிறோம். 9000 ரூபா பெறுமதியான பசளையை 350 ரூபா விற்கு வழங்கவும் நாம் தீர்மானித்தோம்.

உலக நாடுகளில் உணவு நெருக்கடி உக்கிரமடைந்தபோதும் எரிபொருள் விலை 145 அமெரிக்கன் டொலராகிய போதும், அதற்கு நாம் இலகுவாக முகங்கொடுத்துள்ளோம்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் வங் கித்துறை வீழ்ச்சியடைந்து மில்லியன் கணக்கானோர் தொழில்களை இழந்து அநாதரவானபோதும் நாம் எமது வங்கி களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். வங்கிகளை அரசு பொறுப்பேற்றது. அதே போன்று விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு களை வழங்கவும் எம்மால் முடிந்தது.

தற்போது கல்வி, சுகாதாரம் போன்ற சேவைகளை இலவசமாகவே மக்களுக்கு வழங்கி வருகின்றோம். ஒரு நோயாளிக்காக ஒரு கோடியே மூன்று இலட்சம் ரூபா பணம் செலவிடப்படுகிறது. அதே போன்று புற்று நோய் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு பெருமளவில் நிதி செலவிடப்படுகின்றது. நோயாளியைப் பாதுகாப்பதே எமது நோக்கம் என்பதால் இறக்கும் வரை நோயாளிக்காக செலவை தடையின்றி மேற்கொண்டு வருகிறோம்.

நாட்டை மீட்கும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்ட காலங்களிலும் சகல மாவட் டங்களினதும் விவசாய, நீர்ப்பாசனத் துறைகளைக் கட்டியெழுப்புவதற்கு நாம் நிதி ஒதுக்கத் தவறவில்லை. பல குளங்கள் வாவிகள் இதன் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டன.

நாட்டில் பல அபிவிருத்தித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள துறைமுகம் மூலம் இப்பகுதி மக்களுக்குப் புதிய வர்த்தக சந்தை வாய்ப்பு உருவாவதுடன் பெரு மளவிலான தொழில் வாய்ப்புகளும் கிட்டும்.

விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை உபயோகித்து பலனைப் பெருக்குவதே எமது நோக்கம். அதற்கான பூரண பங் களிப்பினை விவசாய தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்குவது மகிழ்ச்சி யளிக்கிறது. விவசாய ஆராய்ச்சி உத்தி யோகத்தர்கள் வயது முதிர்ந்த நிலையில் அவர்களைப் பாதுகாக்கும் வகையில் ஓய்வூ தியத் திட்டமொன்றை நடைமுறைப் படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

எதிர்கால சந்ததியினர் பெரும் எதிர் பார்ப்புடன் உள்ளனர். அவர்களை கல்வி யில் சிறந்தவர்களாகவும் நாட்டை நேசிப் பவர்களாகவும் ஒழுக்கத்தில் சிறந்தவர் களாகவும் உருவாக்குவது எமது பொறுப்பு. அதனால்தான் அரசாங்கத்துக்கு வருமானம் குறைந்த போதும் போதையொழிப்பு நட வடிக்கையை நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம். எத்தகைய அபிவி ருத்திகளை மேற்கொண்ட போதும் சிறந்த சந்ததியை உருவாக்க முடியாது போனால் அதில் பயனில்லை. நாம் நமது இளைய பரம்பரைக்கும் சமூகத்திற்கும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும். அதேபோன்று பல் கலைக்கழக செயற்பாடுகள் நாட்டின் அபி விருத்திக்கு பங்களிப்பானதாக வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விவசாய தொழில்நுட்ப டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றைய தினம் அம்பாந்தோட்டை வெலிகந்தயிலுள்ள கொழும்பு பல்கலைக்கழக இணை நிறு வனத்தில் நடைபெற்றதுடன் டிப்ளோமா பாடநெறியில் சித்தியடைந்த 50 மாணவர்கள் ஜனாதிபதியிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக