1 டிசம்பர், 2010

டெங்கு ஒழிப்புக்கென 500 மில். ரூபா ஒதுக்கீடு


டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்களுக்கென அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கம் டெங்கு ஒழிப்புக்கான சவாலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதால் டெங்கு நோய் பரவுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட் டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோய் வெகுவாகக் குறைந் துள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:- 2005ம் ஆண்டு முதல் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்காக 50 மில்லியன் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் அது 500 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் டெங்கு நோய் பரவும் மாவட்டங்களில் அதனை ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக் கப்படுவோர் தொகை குறைவடைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக