23 நவம்பர், 2010

ஐ.நா.வில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்






ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கஸ் பிலிராகிஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அந்த தீர்மானத்தில், "உலக சமாதானத்துக்காகவும், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் நிலை நாட்டவும் இந்தியா பாடுபட்டு வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டு மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைதிப் படைகளில் இந்தியா பெருமளவு தன் பங்களிப்பை அளித்து வருகிறது.

எனவே இந்தியாவுக்கு ஐ.நா. சபையில் நிரந்தர இடம் அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றவாறு ஐ.நா. விதிமுறைகளின் 23-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட வேண்டும்' என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் வெளியுறவு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குழு முடிவெடுத்த பின்னர் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக