23 நவம்பர், 2010

இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா செய்கை அழிப்பு

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது வெல்லவாய பிரதேசத்தில் எட்டு ஏக்கர் கஞ்சா சேனை ஒன்றினை முற்றிகையிட்டு இலங்கை வரலாற்றில் இரண்டரை கோடி ரூபாய் பெறுமதியுள்ள 57000 கிலோ கஞ்சாவை தீயிட்டு அழித்துள்ளனர்.

இது இலங்கையில் இது வரை ஒரே நேரத்தில் அளிக்கப்பட்ட மிகப் பெரிய தொகை என பொலிஸார் கூறுகின்றனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் ஒருவாரத்துக்கு முன் 2500 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்த நபர் ஒருவரிடம் பெற்ற தகவலின் பிரகாரம் மற்றும் நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லவாயப் பிரதேசத்துக்குச் சென்று இந்த கஞ்சா தொகையினை அழித்துள்ளனர்.

வெல்லவாயவில் மிகவும் கஷ்டப்பிரதேசமான ஒரு காட்டுப் பகுதியில் இக் கஞ்சாசேனை நடாத்தப்பட்டதாகவும் மூன்று தினங்கள் இரவு பகளாக விழித்திருந்து இன்று அதிகாலை வரையும் கஞ்சா சேனையை அழிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மத்திய மாகானத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அரிபர் காமினி நவரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயன்த கம்மன்பில ஆகியோரின் மேற்பார்வையிலே பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்க தலமையிலான பொலிஸ் குழுவொன்று இன் நடவடிக்கையில் ஈடு பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக