அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளத்தில் ஆகக்குறைந்தது 1200 ரூபா அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் அல்லாத கொடுப்பனவாக மாதாந்த சம்பளத்தில் 5% அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் ஊழியர்கள் 1200 ரூபாவிலிருந்து 3140 ரூபா வரையில் சம்பள அதிகரிப்பை பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 2011 லிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது அடிப்படைச் சம்பளத்தின் 5 சதவீததிற்கு சமமான சிறப்புக் கொடுப்பனவு வழங்கப்படும்.
தற்பொழுது வழங்கப்படுகின்ற வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதாந்தம் ரூபா 5,250/- இலிருந்து மாதாந்தம் ரூபா 5,850/- ஆக அதிகரிக்கப்படும். இவ்வதிகரிப்பு பதவி நிலை உத்தியோகத்தர் அல்லாதவர்களுக்கு 2011 ஜனவரியிலிருந்தும் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு 2011 ஜுலையிலிருந்தும் வழங்கப்படும்.
2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 6/2006 (யயியியி) இற்கு ஏற்ப அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் ஆசிரியர்களுக்கு சீராக்கப்பட்ட சம்பள முரண்பாடுகளுக்கு கொடுபட வேண்டிய நிலுவைகளும் வழங்கப்படும்.
2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில் பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு “கல்விசார் கொடுப்பனவு” வழங்கப்படும், நீதிச் சேவை ஆணைக்குழுவின் கீழ் வருகின்ற நீதித்துறை உறுப்பினர்களுக்கு “ஆளுக்குரிய கொடுப்பனவு” வழங்கப்படும்.
மற்றும் வைத்தியர்களுக்கான “சேவை அழைப்புக் கொடுப்பனவு” 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.
சர்வதேச அங்கீகாரமுள்ள வெளியீட்டாளர்க ளால் வெளியிடப்படும் ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைச் செய்கின்ற பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்களு க்கும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும் அவர்களது அடிப்படைச் சம்பளத்தின் 25 சதவீதத்திற்கு சமமான மாதாந்த ஆய்வுக் கொடுப்பனவு வழங்கப்படும்.
இக்கொடுப்பனவு 2011 ஜனவரியிலிருந்து தொடங்குகின்ற 2 வருட காலப்பகுதிக்கு, இக்காலப்பகுதியில் அத்தகைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வற்றிற்கே வழங்கப்படும். 2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்தப்படுகின்ற வகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 6/2006 (யயி) இன் அமுலாக்கத்திற்கு நிர்வாகத் தடைகளாக உள்ளவற்றை நீக்குமுகமாக சம்பள சீரமைப்புக்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
ஓய்வூதியம் பெறுநர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளின் மீளாக்கம்
2011 ஜனவரியிலிருந்து செயற்படுத்த ப்படுகின்ற வகையில், தற்போது வழங்கப்படுகின்ற ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மாதாந்தம் ரூபா 2,375/- லிருந்து மாதாந்தம் ரூபா 2,675/- ஆக அதிகரிக்கப்பட்டு வழங்கப்படும்.
2011 ஜுலையிலிருந்து செயற்படுத்தப் படுகின்ற வகையில், 01.01.2004 இற்கு முன்பு ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் ரூபா 750/- அதிகரிப்பு வழங்கப்படுகின்ற வேளையில், 01.01.2004 தொடக்கம் 31.12.2005 காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் ரூபா 250/- அதிகரிப்பு வழங்கப்படும். இது ஓய்வூதியத்தில் இருக்கின்ற முரண்பாடுகளை திருத்தும் வகையில் செய்யப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக