9 நவம்பர், 2010

வேலையற்றோர் தொகை 5.4 வீதமாக குறைவு


இலங்கையின் வேலையற்றோர் தொகை 5.4 வீதமாகக் குறைவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமாக வேலையற்றவர்களின் எண்ணிக்கை 437,000 என்றும் இதில் 4.1 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் 8 வீதமானவர்கள் பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

15 முதல் 24 வயதெல்லையுடைய இளைஞர்களில் வேலையற்றோர் தொகை 20.7 வீதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்களைவிடப் பெண்களே வேலையின்மையால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு 5.7 வீதமாகக் காணப்பட்ட வேலையற்றோர் வீதம் 2010 இல் 5.4 ஆக குறைந்துள்ளது.

அதேநேரம் 2010 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் பொருளாதார ரீதியில் செயற்திறன் மக்கள் சனத்தொகை 8.1 மில்லியன் என்றும், இதில் 65.8 வீதமானவர்கள் ஆண்கள் என்றும், 34.2 வீதமானவர்கள் பெண்கள் என்றும் இந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப் பட்டுள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தில் ஆண்களின் பங்களிப்பு 67.6 வீதமாகவும் பெண்களின் பங்களிப்பு 31.6 வீதமாகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக