26 அக்டோபர், 2010

தனியார், சர்வதேச பாடசாலைகளுக்கு அரசின் கண்காணிப்பு


தனியார் மற்றும் சர்வதேச பாடசா லைகளை கல்வி அமைச்சின் மேற்பார் வையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்விய மைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன நேற்று தெரிவித்தார்.

நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ள புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் இவ்விடயம் இணைத்துக்கொள்ளப் படுமெனவும் அவர் தெரிவித்தார்.

கல்வியமைச்சின் சட்ட திட்டங்களை சர்வதேச பாடசாலைகள் உதாசீனப்படுத்தி வருவதால் அத்தகைய பாடசாலைகள் விடும் தவறுகளுக்கு அமைச்சே வகை சொல்ல நேர்வதாகத் தெரிவித்த அவர்; இந்நிலையைத் தொடரவிடமுடியாது எனவும் தெரிவித்தார்.

அண்மையில் சர்வதேச பாடசா லைகளுக்கூடாக வெளியிடப்பட்ட பாட நூல்கள் சம்பந்தமாக பல சர்ச்சைகளும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமையைச் சுட்டிக்காட்டிய அவர், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்போது அவர்க ளைக் கல்வியமைச்சில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்; கல்வித் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற் கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட் டிலுள்ள கல்விமான்களிடம் இதற்கான கருத்துக்களும் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன. இந்த வகையில் கல்வித் துறையில் நிலவும் சகல குறைபாடுகளையும் நீக்கும் வகையில் புதிய கொள்கைத்திட்டம் அமையும்.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும் போது அவர்களின் தகைமைகள் விடயத்தில் எதிர்காலத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும். அதற்காகவே தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்போதும் அவர்களைக் கல்வியமைச்சு பதிவு செய்யவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக